உலகம்

அரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் தெரிவித்திருக்கிறார்.

இராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் - குளோபல் டைம்ஸ்

தென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னை தயாரித்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

மதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்

சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.

கருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தை

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

டாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு

வங்தேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.

டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவு

தங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.

ஸ்பெயின் ஏழு கால்பந்து கிளப்புகள் மில்லியன் கணக்கான டாலர்களை திரும்ப வழங்க உத்தரவு

ஸ்பெயினிலுள்ள ஏழு முன்னிலை கால்பந்து கிளப்புகள் , மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் அரசின் உதவி அல்லது ஆதரவை திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.

சீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை

சீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.

கென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கென்யாவின் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது. மாடுகளைப் போல் அல்லாமல் ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை. பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த காணொளி

பாக்தாத் குண்டுவெடிப்பில் 165 பேர் பலி: யார் பொறுப்பு?

இராக்கின் பாக்தாதில் இந்த ஆண்டில் நடந்த மிகமோசமான தாக்குதலில் கொல்லப்பட்ட 165 பேருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான மூன்று நாள் அரசமுறை துக்கதினம் துவங்கியுள்ளது. கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அறிவிப்பு.

சிரியா: மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

வங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்

வங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரே பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு உகாண்டா பயணம்

எண்டபி தாக்குதல் நடந்து 40 ஆண்டுகள் ஆகியதை அனுசரிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு உகாண்டாவிற்கான தனது விஜயத்தை தொடங்கியுள்ளார்.

புகுஷிமா விபத்து: 5 ஆண்டுகளுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் பசிஃபிக்

ஜப்பானின், ஃபுகுஷிமா அணு உலையில் விபத்து நடந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு, பசிஃபிக் பெருங்கடலில் கதிரியக்க அளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ஆஸ்திரேலிய பிரதமர் பதவி விலக பில் ஷோர்டன் கோரிக்கை

ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகளுக்கு மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷோர்டன், ஆஸ்திரேலிய பிரதமர் பதவி விலக வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz