தமிழகம்



வெளிநாட்டு கடனை அடைக்க ரூபாய் மதிப்பு சரிவால் ரூ.68,500 கோடி கூடுதல் செலவு

புதுடெல்லி: ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாட்டு கடனை அடைக்க கூடுதலாக ரூ.68,500 கோடி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்கு செல்கிறது. இதனால் கச்சா எண்ணெய்க்கு கூடுதல் விலை, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு மட்டுமின்றி மேலும் பல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு ஏறக்குறைய 11 சதவீதம் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு ரூ.72ஐ தாண்டியது.  இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு ரூ.45,700 கோடி அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல், வெளிநாடுகளிடம் வாங்கிய குறைந்த கால கடன்களை வரும் மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் இந்த கடன்களை அடைக்க ரூ.68,500 கோடி கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட், நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் என மொத்தம் 21,760 கோடி டாலர் செலுத்த வேண்டி வரும். இதில் நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் 50 சதவீதம் செலுத்த வேண்டி வரும். இதன்படி டாலர் மதிப்பு சராசரியாக கடந்த ஆண்டில் 65.1 ரூபாய் என வைத்தால் கூட ரூ.7 லட்சம் கோடி வருகிறது. தற்போதைய நிலையில் ரூபாயின் சராசரி மதிப்பு ரூ.71.4 என கணக்கிட்டால் கடன் தொகையாக சுமார் ரூ.7.8 லட்சம் கோடி வரை செலுத்த வேண்டி வரும். இதன்படி சுமார் ரூ.68,000 முதல் ரூ.70,000 கோடி கடன் தொகை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது என பாரத ஸ்டேட் வங்கி பொருளாதார ஆலோசகர் சவும்ய காந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.தொடர் சரிவில் இருந்த ரூபாய் மதிப்பு நேற்று வர்த்த முடிவில் சற்று வலுப்பெற்றது. நேற்று வர்த்தக துவக்கத்தில் ரூபாய் மதிப்பு ரூ.72.04 ஆக இருந்தது. பின்னர் ரூ.71.65ஆகவும் வர்த்தக முடிவில் ரூ.71.73ஆகவும் இருந்தது. முந்தைய நாளை விட ரூபாய் மதிப்பு 26 காசு அதிகரித்தது. இதுபோல் தொடர்ந்து வலுப்பெற்றால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வெளிநாட்டு கடன் தொகை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து மீள முடியும்.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz