தமிழகம்தோராய அடிப்படையில் கணக்கு தொடங்கியவர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத 12 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்தாகிறது

நாகர்கோவில்: தோராய அடிப்படையில் பதிவு செய்து கணக்கு தொடங்கி ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாத 12 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை ரத்து செய்ய ஜிஎஸ்டி துறை முடிவு செய்துள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி)  கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி அன்று  அமலானது. ஒவ்வொரு பொருளின் சேவை வரி முறையின் குறைபாடுகளை அகற்ற ஜிஎஸ்டி முற்படுகிறது, இதன் விளைவாக வரிக்கு வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் வர்த்தகம் செய்கின்ற வணிகர்கள், நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டனர். ஜிஎஸ்டி தொடங்கப்பட்ட வேளையில் ரூ.20 லட்சம் மதிப்பில் வர்த்தகம் செய்யாதவர்களும் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும், என்பது கட்டாயமாக இருந்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு சற்று குறைவாக பரிவர்த்தனையில் தொழில் செய்தவர்களும் ஜிஎஸ்டி பதிவுகளை அவசர அவசரமாக மேற்ெகாண்டிருந்தனர். இவர்கள் தற்காலிகமாக பதிவு செய்துவிட்டு பின்னர் விலகிக்கொள்ளலாம் என்று தெரிவித்தபோதிலும் பலரும் அதனை செய்யாததால் அனைவரும் தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்கில் இருந்து வருகின்றனர். அதே வேளையில் இவர்கள் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யவும் இல்லை. ஆனால் ஜிஎஸ்டியின் பராமரிப்புக்குள் இந்த கணக்குகள் வந்துவிடுவதால் இவற்றை முழுவதும் கையாள வேண்டிய நிலை ஜிஎஸ்டி துறைக்கு உள்ளது. இதனால் செயல்படாமல் உள்ள கணக்குகளை நீக்கம் செய்ய ஜிஎஸ்டி துறை முடிவு செய்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 1.15 கோடி ஜிஎஸ்டி கணக்குகள் உள்ளன. இவற்றில் 80 சதவீதம் கணக்குகளில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே ஜிஎஸ்டி ரிட்டன் முறையாக தாக்கல் செய்து வருகின்றன. இதர 12 லட்சம் நிறுவனங்கள் கணக்கு ஏதும் தாக்கல் செய்யவில்லை. இவைதான் தற்போது நீக்கப்படும் பட்டியலில் இருந்து வருகின்றன. ஜிஎஸ்டி நெட் வொர்க்கை வேகப்படுத்தவும், முறையாக ரிட்டன் செய்கின்றவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்தவும், சேவை அளிக்கவும் தேவையற்ற நிலையில் உள்ள பதிவுகளை ரத்து செய்தற்கான காரணம் என்று கூறப்படுகிறது. சட்டரீதியாக இதுபோன்று நோட்டீஸ் அளித்த பின்னர் மட்டுமே இந்த நிறுவனங்களின் பதிவுகளை ரத்து செய்ய இயலும். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கண்டறிந்து அவர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பும் ஜிஎஸ்டி துறையால் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz