அரசியல்கண்காணிப்பு இருந்தாலே அதிகாரிகளுக்கு பயம் வரும்: மா.சுப்ரமணியன், எம்எல்ஏ (சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்)

நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சமயத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பாக இயங்கியது. இந்த பிரிவு மாநகராட்சியில் நடக்கும் எந்த வேலையாக இருந்தாலும் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்யும். குறிப்பாக, கட்டுமான பணியாக இருந்தால் கூட தரமாக நடக்கிறதா என்பதை இந்த பிரிவு ஆய்வு செய்கிறது. நாங்கள் இருக்கும்போது, ₹4 ஆயிரம் கோடிக்கு மேல்  பல்ேவறு திட்டப்பணிகளுக்கான வேலை நடந்துள்ளது.  இந்த வேலையை ஊழல் தடுப்பு பிரிவு கண்காணித்தது. அவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்தில் அதிமுக வந்த பிறகு ஊழல் தடுப்பு பிரிவே செயல்படாமல் போய் விட்டது. இப்போது, உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சியில் ஊழல் தடுப்பு பிரிவு செயல்படவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக  மாநகராட்சி நிர்வாகத்தில் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படாத நிலைதான் இருந்து வருகிறது.  ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பயந்து வேலை செய்வார்கள். அதனாலேயே ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது அனைவரது எண்ணம். நான் ேமயராக இருக்கும் போது, இ டெண்டர் முறையில் தான் டெண்டர் விடப்பட்டது. அந்த சமயத்தில் யார் வேண்டுமானாலும் டெண்டரில் கலந்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.  டெண்டரில் கலந்து கொள்ள விரும்புவோருக்காக, ஆணையர், தலைமை பொறியாளர், மக்கள் தொடர்பு அதிகாரி அறைகளில் டெண்டருக்கு விண்ணப்பிக்க பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. எதற்காக வைத்தோம் என்றால் கான்ட்ராக்டர்கள் கூட்டணி வைத்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவார்கள் என்பதால், அதை தவிர்க்க அவ்வாறு பெட்டி ைவக்கப்பட்டது. ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாங்கள் பெட்டியை வைத்தோம். ஆனால், இப்போது அந்த நடைமுறை இல்லை. இப்போது, டெண்டரில் கடுமையான ஊழல் வந்து விட்டது.   விதிமீறல் கட்டிடங்களை, கட்டும் போதே தடுத்து பிளான் ஆய்வு செய்து அதிகாரிகள் தடுக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அந்த வேலையை பார்ப்பதில்லை. ஊழல் தடுப்பு பிரிவு இருந்திருந்தால் அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்து இருப்பார்கள். நான் மேயராக இருந்த போது சொத்து வரி போடுவதில் நிறைய முறைகேடும் நடந்தது.   குறிப்பாக, 1 லட்சம் சதுர அடி கமர்ஷியல் பில்டிங் என்றால் 40 ஆயிரம் சதுர அடி குடியிருப்பு பகுதி என்று கணக்கிட்டு சொத்து வரி விதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், அதிமுக நிர்வாகத்தில் அப்படி எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே சென்னையில்  விதிமீறல் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்தவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் குற்றங்கள் அதிகரித்து விடும்.  டெண்டருக்கு விண்ணப்பிக்கும்போதே இப்போது குறிப்பிட்ட பர்சன்டேஜ் தொகை கமிஷனராக தர வேண்டும் என்ற நிலை உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும். ஒப்பந்தம் எடுக்க விரும்புவர்களுக்கு ஒப்பந்தம் தர வேண்டும். அதற்கு இ - டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போது அது சரியாக இல்லாமல் இருப்பதால் ெடண்டர் விடுவதில் முறைகேடு நடக்கிறது. சென்னையில் விதிமீறல் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்தவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் குற்றங்கள் அதிகரித்து விடும்.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz