அரசியல்நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது உழவர்களை அழிக்கும் சதி: கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஆண்டு எனப்படுவது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை ஆகும். நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்றுமுன்தினம் முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கி விட்டு நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள உழவர் அமைப்புகள் செப்டம்பர் 3ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுபற்றி விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது சரியல்ல. ஒருபுறம் கொள்முதல் விலையை உயர்த்தி விட்டு, மறுபுறம் கொள்முதலை நிறுத்துவது பசியில் வாடும் மனிதனுக்கு உணவைக் கொடுத்து விட்டு, உயிரைப் பறிக்கும் கொடுமைக்கு இணையானதாகும்.நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும். அவற்றை பொதுவினியோகத் திட்டத்தின்படி நியாய விலைக்கடைகளில் வழங்கி உழவர்களையும், மக்களையும் காக்க வேண்டும்.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்: விவசாயிகள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். உற்பத்தி பொருள்களுக்கு மத்திய அரசு இதுநாள் வரை கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யவில்லை. இந்நிலையில், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் தான் விவசாயிகள் பெற்று வந்தனர். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து, தமிழ்நாடு அரசு அதனை ஏற்று, ஆகஸ்ட் 31 முதல் நேரடி கொள்முதல் நிலையங்களை மூடி இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.அரசின் இந்நடவடிக்கையால் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலை, விவசாயிகளுக்கு கிடைக்காமல் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்யக் கூடிய மிக மோசமான செயலாகும். காவிரி பாசன மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களிலும் பம்புசெட் பாசன வசதியுள்ள விவசாயிகளின் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில், நேரடி கொள்முதல் நிலையங்களை மூடுவது என்ற அரசின் முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் முடிவை திரும்ப பெற்று அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கவும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும், அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz