அரசியல்



எடப்பாடி அரசு கமிஷனை தூர் வாருகின்றதே தவிர கால்வாயை தூர் வாரவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அணையை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: முக்கொம்பு அணை மதகுகளை முன்கூட்டியே ஆய்வு செய்ய அரசு தவறிவிட்டது. முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் சேதமாவதை தவிர்த்து இருக்கலாம். அரசின் அலட்சியத்தால் மதகுகள் உடைந்துள்ளன. இதற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். முக்கொம்பில் 40 சதவீத சீரமைப்பு பணிகூட நிறைவடையவில்லை. மேட்டூர் அணை திறக்கப்பட்டு 47 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. எடப்பாடி அரசு கமிஷனை தூர் வருகின்றதே தவிர கால்வாயை தூர் வரவில்லை. இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz