அரசியல்அதிமுக அரசு மீது பழிச்சொல் வீசுவது கண்டு கலங்கப்போவதில்லை : அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: அதிமுக அரசு மீது திமுக தலைமை பழிச்சொல் வீசுவது கண்டு கலங்கப்போவதுமில்லை, கடமை தவறப்போவதுமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அதிமுக அமைப்பு செயலாளரும் தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பும், அண்ணாவுக்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவர் என்ற புகழும் பெற்றிருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 95 வயதில், முதுமையாலும், உடல்நலக் குறைவாலும் காலமானார் என்ற துயரமான நிகழ்வு நடைபெற்ற சில மணி நேரங்களுக்குள்ளாகவே, முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் காணப்படும் அபாண்டமான குற்றச்சாட்டும், நஞ்சை விதைக்கும் பழிச் சொல்லும் கண்டு உள்ளம் பதைபதைக்கிறது. கருணாநிதி இறுதி சடங்கு அன்று அரசு விடுமுறை விடப்பட்டது. அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. காவல் துறையினர் முழு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அரைக் கம்பத்தில் தேசியக்கொடி பறந்தது. ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. துக்கம் அனுசரிக்கும் வகையில் அரசு விழாக்கள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இரங்கல் செய்தி அரசிதழில் வெளியிடப்பட்டது. காமராஜர் மறைந்த போதும், முதல்வராக இருந்து பணியாற்றிய ஜானகி அம்மையார் மறைந்தபோதும் மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் அதை கருணாநிதி மறுத்துவிட்டார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நாங்களும் திமுக பழிச்சொல் வீசுவது கண்டு கலங்கப்போவதுமில்லை; கடமை தவறப்போவதுமில்லை என்று  கூறியுள்ளார்.ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு பழ.நெடுமாறன் மறுப்புஅமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு குறித்து 1975ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறன் கூறியதாவது:காமராஜர் மறைந்ததும், அவரது உடலை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் திடலில் வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். ஆனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தான் காமராஜர் உடலை சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் அருகே உள்ள இடத்தில் வைக்க கேட்டுக் கொண்டார். அதன்படி தற்போது கிண்டியில் உள்ள காமராஜர் அரங்கத்தை ஒதுக்கி தந்தது அப்போதைய முதல்வர் கருணாநிதி தான். நான் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அப்போது காமராஜருக்கு கடற்கரையில் இடம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதுபற்றி வரும் தகவல்கள் தவறானவை என்றார்.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz