தமிழகம்சிங்கப்பூரின் பிரபலமான முஸ்தபா ஸ்டோர் மீது ஊழியர்கள் குற்றச்சாட்டு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முஸ்தபா ஸ்டோர், ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்காமல் சட்டத்தை மீறியதாக புகார் எழுந்துள்ளது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் சிரங்கூன் சாலையில் முஸ்தபா ஸ்டோர் உள்ளது. இந்திய வம்சாவளியான முஸ்டாக் அகமதுவுக்கு சொந்தமான இந்த வணிக வளாகம் 1973ல் 900 சதுர அடியில் கட்டப்பட்டு, 1985ல் 40,000 சதுர அடிக்கு பரந்து விரிந்து மாபெரும் வளர்ச்சி கண்டது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்த வணிக வளாகத்தில் சுமார் 3 லட்சம் பொருட்கள் விற்கப்படுகின்றன.  இந்நிறுவனத்தில் ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் முஸ்தபா நிறுவனம் வெளிநாட்டு ஊழியர் வேலை நியமன சட்டத்தை மீறி, ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம், சலுகைகள் வழங்காமல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சிங்கப்பூர் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தற்போது விசாரணையை தொடங்கியிருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூடுதல் தகவல்களை தர மறுத்து விட்டனர்.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz